பின்னலின் மகத்துவம்

பின்னலின் மகத்துவம்...!

பின்னல் உறவைக் குறிக்கிறது.               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


முடியை விரித்துவிடுவது(free hair) அமங்களமானது. எவ்வுறவும் வேண்டாம் என்பதை குறிக்கிறது. ஆகையினால் தான் இறந்தவர் வீட்டிலும் பிணத்தின் பின்னும் தலைவிறி கோலமாக செல்வர்.
அதன் பொருள் "என்னவரே சென்ற பின் எனக்கேது உறவு. இனி எந்த உறவும் எனக்கில்லை" என்பதாகும். மேலும் தலை முடியின் நுனி வழியாக ஆத்ம ஶக்தி வெளியேறுகிறது.

நல்ல / தீய உணர்வுகள் (அ) அதிர்வுகள் வந்து செல்வதற்கான ஊடகம் (medium) போன்றது முடியின் நுனி...

மேலும் ஸந்யாஸிகள் மொட்டை அடித்துக் கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம்... ஏனெனில் வெளியிலிருந்து பெறுவதற்கும் ஒன்றுமில்லை... நம்மிடமிருந்து போவதற்கும் ஒன்றுமில்லை... என்பதை உணர்த்துவதற்காக....

ஆகையினால் தான் முற்காலத்தில் நுனி முடி வெளியில் தெரியாமல் இருக்க நார் அல்லது குஞ்ஜலம் கட்டிக் கொள்வர்...
ஆகையால் தலைவிறி கோலத்தை தவிர்ப்போம்.இது உறவின் மீதான பிடிப்பை அறுக்க கூடியது.

           பின்னல்

இதன் அமைப்பு த்ரிவேணி சங்கமத்தை ஒத்தது. மூன்று நதிகள் சேரும் போது இரண்டு நதிகள்(கங்கை,யமுனை) கண்களுக்கு புலப்படுகின்றன. ஒரு நதி (ஸரஸ்வதி) புலப்படுவதில்லை.
இதே போலவே பின்னலின் மூன்று பகுதிகளில் இரண்டு பகுதிகளே புலப்படுகின்றன.

பின்னலின் வலது- பிறந்த வீடு இடது-புகுந்த வீடு நடுப்பகுதி-பெண்
தன்னை மறைத்து இரு வீட்டாரையும் இணைத்து அழகுற தோற்றமளிக்கச் செய்வதே இதன் பொருளாகும்.
தன்னை முன்னிறுத்தும் பெண்ணை காட்டிலும்
தன் குலத்தை முன்னிறுத்துபவளே உயர்ந்தவள் ஆவாள்.

ஆகையினால் பின்னல் வெறும் அலங்காரம் அல்ல வாழ்வின் தத்துவமாகும்.மேலும் அறிவோம் தெளிவோம்....